இலங்கையில் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலரின் நிலைமை என்ன?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

திங்களன்று இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு மிரட்டப்பட்ட விடயத்தில், அதற்குப்பின் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதனால் நடந்ததைக் குறித்து அறிக்கை அளிக்கும் நிலையில், தற்போது அவர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவருக்கு என்ன ஆயிற்று, என்ன உடல் நலக் குறைவு என்பது போன்ற விடயங்களை தூதரகம் தெரிவிக்கவில்லை.

திங்களன்று, கார் ஒன்றிற்குள் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு, கொழும்பிலுள்ள ஒரு தெருவில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் மிரட்டப்பட்டபின், இரண்டு மணி நேரத்திற்குப்பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

Keystone / Anthony Anex

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ள இலங்கை குடிமக்களின் மொபைல் போன் விவரங்களை அளிக்குமாறு அவர் மிரட்டப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நடந்தவற்றை சுவிஸ் வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ள சுவிட்சர்லாந்து, நடந்த சம்பவம் குறித்து உடனடியாக முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அரசும் உடனடியாக ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக, இலங்கை வெளி விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்