சுவிட்சர்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மண்டலத்தில் திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொதுமக்களை அலறியடித்து வெளியேற வைத்துள்ளது.

வாலெய்ஸ் மண்டலத்தில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் குவியும் Verbier பகுதியில் உள்ளூர் நேரப்படி 3.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 3.0 என பதிவான இந்த நிலநடுக்கத்தை அடுத்து, பலமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கம் தொடர்பில் பொதுமக்கள் பலர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் திடீரென்று ஏற்பட்ட பூகம்பத்தால் அலறியடித்து வெளியேறியுள்ளனர்.

வெர்பியருக்கு கிழக்கே ஆறு கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்க நடுவம் உருவானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கமானது 7.5 கிலோமீற்றர் ஆழத்தில் நடந்துள்ளது.

வாலெய்ஸ் மண்டலத்தில் இந்த ஆண்டு நவம்பர் மாத துவக்கத்தில் இருந்தே பலமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சியோன் பிராந்தியத்திற்கு வடக்கே கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 300 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பகுதியில் இதுவரை ரிக்டர் அளவுகோலில் 3.3 என மட்டுமே நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறும் அதிகாரிகள்,

இப்பகுதியில் வலுவான ஒரு பூகம்பம் ஏற்படும் என்பதை நிராகரிப்பதற்கில்லை என நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்