ஏழு லிற்றர் தண்ணீர் மொத்தமாக குடித்த சுவிஸ் பெண்மணி: பின்னர் நடந்த துயரம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பெண்மணி ஒருவர் இடைவெளிவிட்டு 7 லிற்றர் தண்ணீர் குடித்த நிலையில் அவர் தீவிர ஒவ்வாமையால் மருத்துவரை நாடிய சம்பவம் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பெண்மணி ஒருவர் இடைவெளிவிட்டு 7 லிற்றர் தண்ணீர் குடித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு வலிப்பு நோய் தாக்குதல் ஏற்பட்டதாகவும், அவர் பாதி மயக்கமுற்ற நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அவரை சோதனையிட்ட மருத்துவர்கள், அவரின் ரத்தத்தில் சோடியத்தின் அளவு சரிந்ததே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

இது அவரது மூளையை பாதித்ததாகவும், அதனாலையே வலிப்பு நோய் தாக்குதல் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அளவுக்கு அதிகமான தண்ணீர் அருந்துவதால், இதுபோன்ற சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேவைக்கு அதிகமான தண்ணீர் ரத்தத்தில் சோடியத்தின் அளவை குறைக்கும் எனவும், இது மூளையை பாதிக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாள் ஒன்றிற்கு ஒருவர் குறைந்தபட்சம் ஒரு லிற்றர் நீராவது அருந்த வேண்டும் எனவும், ஆனால் மிக அதிக அளவு நீரை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2007 ஆம் ஆண்டு தண்ணீர் அருந்தும் போட்டி ஒன்றில் கலந்துகொண்ட பெண் ஒருவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

28 வயதான அவர் சுமார் 6.5 லிற்றர் தண்ணீர் அருந்திய நிலையில், சில மணி நேரத்திற்கு பின்னர் மரணமடைந்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்