சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயன்ற வெளிநாட்டவர்கள்: அவர்களிடமிருந்த பொருளைக் கண்டு அதிர்ந்த பொலிசார்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
397Shares

சுவிட்சர்லாந்துக்குள் இத்தாலி எல்லை வழியாக நுழைய முயன்ற நால்வரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு காசோலையைக் கண்ட பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இத்தாலியர்கள் இருவர், ஒரு ஈரானியர் மற்றும் ஒரு ஆப்கன் நாட்டவர் ஆகியோர், இத்தாலி எல்லை வழியாக சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை பொலிசார் கைது செய்தனர்.

அவர்களை சோதனையிட்ட பொலிசாருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களிடம் ஒரு காசோலை இருந்தது.

அது 100 மில்லியன் யூரோக்களுக்கான காசோலை. இவ்வளவு பெரிய ஒரு தொகைக்கான காசோலையை தாங்கள் இதுவரை பார்த்ததில்லை என்கிறார்கள் அந்த பொலிசார்.

அத்துடன், அவர்களிடமிருந்து கிரிப்டோ கரன்சி தொடர்புடைய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவை அனைத்துமே, ஒரு மாபெரும் சட்டவிரோத பணப்பரிமாற்ற திட்டத்துடன் தொடர்புடையவையாக இருக்கலாம் என கருதும் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்