லொட்டரியில் பெருந்தொகை அள்ளிய சுவிஸ் நபர்: எவ்வளவு தொகை தெரியுமா?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

மேற்கு சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதியான ரோமண்டியில் ஜோக்கர் ஜாக்பாட் லொட்டரியில் நபர் ஒருவர் பெருந்தொகையை பரிசாக அள்ளியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோமண்டி பகுதியில் குடியிருக்கும் நபர் ஒருவர் ஜோக்கர் ஜாக்பாட் லொட்டரியில் 2 மில்லியன் பிராங்குகளை வென்றுள்ளார்.

சனிக்கிழமை மாலை. ஜோக்கர் ஜாக்பாட் லொட்டரி வெற்றியாளர்களின் எண்கள் வெளியானது. இதில் ரோமண்டி பகுதியை சேர்ந்த நபர் சுமார் 2 மில்லியன் பிராங்குகளை வென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னொருவரும் ஜோக்கர் ஜாக்பாட் லொட்டரியில் 5 சரியான எண்களை தெரிவு செய்து சுமார் 10,000 பிராங்குகளை வென்றதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த முறையும் எவரும் சரியான எண்களை தெரிவு செய்யாததால், பரிசுத் தொகையானது 5.8 மில்லியன் பிராங்குகளாக அதிகரித்துள்ளது.

எதிர்வரும் புதனன்று மாலை அடுத்த குலுக்கல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்