இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாரா சுவிஸ் தூதரக ஊழியர்?: மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் தூதரகத்திற்கு கொடுக்கப்பட்ட புகாரில் சுவிஸ் தூதரக ஊழியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளதையடுத்து, இலங்கை நீதிமன்றம் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளது.

சுவிஸ் தூதரக ஊழியர் கொழும்புவில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, அவர் பொலிசாரிடம் அறிக்கை அளிக்கும் முன் இலங்கையை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது.

அந்த தடையை இம்மாதம் (டிசம்பர்) 12ஆம் திகதி வரை நீட்டித்து, நேற்று கொழும்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

dailymirror

இதற்கிடையில், அந்த ஊழியரின் பெயர் Garnier Banister Francis என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஞாயிறு மாலை 5 மணியிலிருந்து திங்கள் அதிகாலை 2 மணி வரை மத்திய புலனாய்வுத்துறை Garnierஇன் அறிக்கையை பதிவு செய்தது.

சுமார் ஒன்பது மணி நேரம் Garnierஇன் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அந்த விசாரணை திங்கள் மாலை வரை நீடிக்கும் என்று நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சுவிஸ் தூதரகத்திற்கு கொடுக்கப்பட்ட புகாரில், Garnier பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளதையடுத்து, Garnierஇன் உடல் நிலை மற்றும் மன நிலையை பரிசோதித்து அறிக்கை ஒன்றை அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற தலைமை மருத்துவ அலுவலரிடம் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார் அவர்.

dailymirror

ஆனால், தன்னை ஒரு பெண் மருத்துவர்தான் சோதனை செய்யவேண்டும் என Garnier கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, அவரை பரிசோதிக்க பெண் மருத்துவர் ஒருவரை ஏற்பாடு செய்ய உத்தரவிடுமாறு நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்