சுவிஸில் தனியாக இருந்த பெண்மணிக்கு நேர்ந்த கொடுமை: ஆண்டின் மிக மோசமான செயல் என பொலிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் குடியிருப்புக்குள் தனியாக படுத்திருந்த பெண்மணி ஒருவரை அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்காவ் மண்டலத்தின் லென்ஸ்பர்க் மாவட்டத்தில் இந்து அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் செய்திதொடர்பாளர்,

ஆண்டின் மிக மோசமான செயல் இதுவென தெரிவித்துள்ளார். குறித்த பெண் தமது குடியிருப்பில் சம்பவத்தின்போது தனியாக இருந்துள்ளார்.

சுமார் 2.50 மணியளவில் திடீரென்று தம்மீது யாரோ படுத்திருப்பது அறிந்து அவர் திடுக்கிட்டு விழித்துள்ளார். மட்டுமின்றி அந்த நபரை எட்டித்தள்ளி அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால் அந்த நபர் குறித்த பெண்மணியை வலுக்கட்டாயமாக பலாத்காரத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

இதனிடையே கடும்போராட்டம் நடத்திய குறித்த பெண், அந்த நபரிடம் இருந்து தப்பி, அண்டை வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

அங்கிருந்து பொலிசாருக்கு நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்த பொலிசார், உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.

மட்டுமின்றி, ரோந்து போலிசாருடன் இணைந்து தப்பிச் சென்ற அந்த நபரை அப்பகுதியில் தேடியுள்ளனர்.

ஆனால் அந்த நபர் புதர் மணிடிய பகுதியில் மறைந்திருந்தது பொலிசாருக்கு வசதியாக அமைந்தது.

அவரை கைது செய்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட 28 வயது அல்ஜீரிய நாட்டவர் எனவும்,

அருகாமையில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கும் இல்லத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின்போது அவர் மது அருந்தி இருந்ததாகவும், போதை மருந்தும் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பலாத்கார முயற்சியில் இருந்து குறித்த சுவிஸ் பெண் சாமர்த்தியமாக தப்பியது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ள பொலிசார்,

இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்