சுவிஸ் பெண்ணை மணந்து ஐந்து குழந்தைகளுக்கு தந்தையான வெளிநாட்டவர் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

வெளிநாட்டவர் ஒருவர் சுவிஸ் பெண்ணை மணந்து ஐந்து குழந்தைகளுக்கு தந்தையான நிலையிலும், நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளார்.

Kosova நாட்டைச் சேர்ந்த 34 வயது நபர் ஒருவர், 13 வயது இருக்கும்போது சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார்.

18 வயதில் ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டதால், அவரது வாழிட உரிமம் பறிக்கப்பட்டது.

ஆனால், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக, அவர் தலைமறைவாகிவிட்டார். எப்படியாவது வாழிட உரிமத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, அவர் ஒரு சுவிஸ் குடிமகளை மணந்துகொண்டதோடு, ஐந்து குழந்தைகளுக்கும் தந்தையானார்.

ஆனால், அதற்குப் பின்னரும் பல வாகன குற்றங்களில் ஈடுபட்டு 30,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை கடனாக பெற்று கடனாளியானார்.

என்றாலும் அவரால் ஒரு வேலையைத் தேடிக்கொள்ள முடியவில்லை. அவர் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என கீழ் நீதிமன்றம் ஒன்று அளித்த தீர்ப்பை தற்போது ஃபெடரல் நீதிமன்றமும் உறுதிசெய்துள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...