சுவிஸ் பொலிஸ் மின்னஞ்சலில் வெளியான அந்தரங்க தகவல்: அம்பலமான காதல் கதை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Zug மண்டல பொலிசாரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் இருந்து வெளியான அந்தரங்க தகவல்கள், பொலிஸ் அதிகாரி ஒருவரின் காதல் கதையை வெளிக்கொண்டு வந்துள்ளது.

குறித்த அந்தரங்க தகவல் அடங்கிய மின்னஞ்சலானது பொலிஸ், நிர்வாகம் மற்றும் ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த அந்தரங்க தகவலானது பொலிஸ் உயர் அதிகாரி ஒருவருக்கும் பெண் பொலிசார் ஒருவருக்கும் இடையே நடந்துள்ளது.

இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக அந்த பெண் பொலிசாரால் குறித்த மின்னஞ்சல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பொலிஸ் அதிகாரி ஏற்கெனவே திருமணமானவர் எனவும் அவருக்கு பிள்ளைகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக Zug மண்டல பொலிசார் உடனடியாக மறுப்பு தெரிவித்தாலும், மூன்றாவது ஒரு நபரால் குறித்த மின்னஞ்சல் வெளியிடப்பட்டது என்பது நம்பும்படியாக இல்லை என கருத்து எழுந்துள்ளது.

மின்னஞ்சல் அனுப்பப்பட்டதும், அதை அழிக்க முயன்றதாகவும், ஆனால் அனுப்பியவருக்கு அது முடியாமல் போனது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்