சுவிட்சர்லாந்தில் இரட்டிப்பாகியுள்ள ஓநாய்க்கூட்டங்களின் எண்ணிக்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்திலுள்ள ஓநாய்க்கூட்டங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சுவிட்சர்லாந்தில் ஏழு முதல் ஒன்பது ஓநாய்க்கூட்டங்கள் வரை இருக்கலாம் என அவர்கள் கணித்துள்ளனர்.

ஓர் ஓநாய்க்கூட்டம் என்பது, மூன்று அல்லது நான்கு, ஆண் மற்றும் பெண் ஓநாய்கள் இணைந்து வாழும் ஒரு கூட்டமாகும்.

ஒரு வருடத்திற்குள் ஓநாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. சமீபத்திய கணக்கிடுதலின்படி, குறைந்தபட்சம் ஏழு ஓநாய்க்கூட்டங்கள் வரை இருக்கலாம்.

இதற்கு முன்பு, நான்கு ஓநாய்க்கூட்டங்கள் இருப்பதாக முந்தைய ஆண்டில் கணக்கிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படி பார்க்கும்போது, சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட 60 முதல் 70 ஓநாய்கள் வரை இருக்கலாம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்