2020இலிருந்து கோழிக் குஞ்சுகளை உயிருடன் அரைத்து கொல்ல தடை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் மகிழ்ச்சியை அளிக்க இருக்கிறது.

ஆம், சேவல் குஞ்சுகளை உயிருடன் அரைத்து கொல்வதற்கு 2020-லிருந்து தடைவிதிக்கப்பட உள்ளது.

அதாவது, கோழிகள் குஞ்சு பொறிக்கும்போது, அவை சேவல் குஞ்சுகளாக இருக்கும் பட்சத்தில், அவை முட்டைகளைக் கொடுக்காது என்பதால், அவற்றால் பெரிய அளவில் லாபம் இல்லை என்பதால், அவற்றை உயிருடன் இயந்திரங்களில் போட்டு அரைத்துக் கொல்லும் பழக்கம் பல நாடுகளில் உள்ளது.

இதற்கு கொடூர செயல் முறைக்கு பல ஆண்டுகளாக விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தார்கள்.

எனவே, 2020இலிருந்து சேவல் குஞ்சுகளை உயிருடன் அரைத்து கொல்வதற்கு தடைவிதிக்கப்பட உள்ளது.

அத்துடன், வறட்சி ஏற்பட்டால் கால் நடைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக ராணுவ ஹெலிகொப்டர்கள் தயாராக உள்ளன.

மேலும், கால்நடைகளை கண்காணிக்க இணைய உதவி ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் ஜனவரியிலிருந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்