தங்கையை தனியாக விட்டு காதலனை சந்திக்க சென்ற சுவிஸ் இளம்பெண்: 5 நாட்களாக மாயம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் வோட் மண்டலத்தில் 5 நாட்களாக மாயமான இளம்பெண், தமது காதலரை சந்திக்க சென்ற பின்னரே காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

வோட் மண்டலத்தின் Baulmes பகுதியை சேர்ந்தவர் 17 வயதான சாரா. இவரே கடந்த 27 ஆம் திகதி தமது காதலரை சந்திக்க சென்று, அதன் பின்னர் மாயமாகியுள்ளார்.

மாயமான சாரா தொடர்பில் பரிதவிக்கும் குடும்பத்தார் சமூக வலைதள பக்கங்களில் இதுவரை ஆயிரம் முறை கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுபோன்று இதுவரை சாரா ஒருமுறை கூட மாயமானது இல்லை என கூறும் அவரது தோழி ஒருவர், வெள்ளிக்கிழமை தொடங்கி தமது பேஸ்புக் பக்கத்தில் அவர் ஒரு பதிவு கூட பதிவேற்றவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் சாரா தொடர்பில் அவரது தங்கை வெளியிட்ட தகவல் இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image: Facebook

சாராவும் அவரது தங்கையும் ஒன்றாக இணைந்து Yverdon பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள விளையாட்டு பூங்காவில் தங்கையை தனித்து விட்டுவிட்டு, சாரா தமது காதலரை சந்திக்க சென்றதாக தெரியவந்துள்ளது.

5 நிமிடத்தில் திரும்பி வருவதாக கூறிச் சென்ற சாரா அதன் பின்னர் திரும்பவே இல்லை. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் மண்டல பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்