புத்தாண்டில் சுவிஸில் பிறந்த முதல் குழந்தை: புகைப்படம் வெளியானது

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் புத்தாண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் தகவல் வெளியாகியுள்ளது.

பேடன் கன்டோனல் மருத்துவமனையில் ஜனவரி ஒன்றாம் திகதி 12.13 மணிக்கு குறித்த குழந்தை பிறந்துள்ளது.

Aria Sélène என பெயரிடப்பட்டுள்ள குறித்த குழந்தையானது உண்மையில் டிசம்பர் 27 ஆம் திகதி பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்ததாகவும்,

ஆனால் சில நாட்கள் தாமதமாக ஜனவரி ஒன்றாம் திகதி பிறந்துள்ளது என 38 வயதான தந்தை Thomas Rüttimann தெரிவித்துள்ளார்.

குழந்தை Aria Sélène பிறக்கும்போது 3350 கிராம் எடை இருந்ததாகவும் உயரம் 47 செ.மீ எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Image: Baden Cantonal Hospital
Image: zVg

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்