வெளிநாட்டில் விமான விபத்தில் பலியான சுவிஸ் குடும்பம்: சட்ட நிபுணர்கள் முன்வைத்த கோரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் நடந்த கோரமான விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் குடும்பத்தினர் பெயரில் இழப்பீடு கோரலாம் என சட்ட நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தை சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்டனர்.

சுவிஸ் குடும்பத்தினர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் தொடர்புடைய ஹெலிகொப்டர் நிறுவனம் மீது அமெரிக்க சட்டத்தின் கீழ் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சுவிஸ் குடும்பத்தினர் இந்த விவகாரம் தொடர்பில் சட்ட ஆலோசனை பெற விரும்பினார் இலவசமாக வழங்கவும் தயார் என பிரபல சட்ட நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

அமெரிக்காவை பொறுத்தமட்டில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தவறுதலாக நிகழும் மரணங்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது.

Facebook

ஹவாய் மாகாணத்தை பொறுத்தமட்டில், விபத்து நடந்து இரண்டு ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு தொடுக்கலாம்.

இதுபோன்ற விமான விபத்துகளுக்கு பல மில்லியன் டொலர்கள் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

ஏர்பஸ் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த நபருக்கு 90 சதவிகித தீக்காயம் ஏற்பட்டது.

அவருக்கு ஏர்பஸ் நிறுவனம் 100 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் சுவிஸ் குடும்பத்தினர் 10 முதல் 15 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்