சுவிட்சர்லாந்தில் மூளை பாதிப்புடன் பிறந்த 39 குழந்தைகள்: பிரெஞ்சு நிறுவனத்தின் தவறு?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மூளை பாதிப்புடன் 39 குழந்தைகள் பிறந்ததற்கு காரணம், பிரெஞ்சு நிறுவனம் ஒன்றின் தயாரிப்பான மருந்து ஒன்றுதான் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர் சுவிஸ் பெற்றோர் பலர்.

கர்ப்ப காலத்தில், Sanofi என்ற பிரெஞ்சு நிறுவன தயாரிப்பான Depakine என்ற மருந்து தங்களுக்கு கொடுக்கப்பட்டபோது, அதன் பக்க விளைவுகள் குறித்து தங்களுக்கு விளக்கப்படாததால் தங்கள் குழந்தைகள் மூளை பாதிப்புடன் பிறந்துள்ளதாகக் கூறியுள்ளனர் அவர்கள்.

அதனால் தங்களுக்கு அந்த மருந்தை பரிந்துரை செய்த நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் மீதும் அந்த மருந்தை தயாரித்த நிறுவனமான Sanofi நிறுவனம் மீதும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாங்கள் கர்ப்பமாக இருக்கும்போது அந்த மருந்தை எடுத்துக்கொள்வதால், அந்த மருந்து கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைக் குறித்து தங்களுக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கர்ப்ப காலத்தில் அந்த மருந்தை உட்கொண்டால், 30 முதல் 40 சதவிகிதம் கர்ப்பிணிகளின் கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு அது மூளை பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தில் கர்ப்பிணிகள் Depakine உட்கொண்டதன் காரணமாக 39 குழந்தைகள் மூளை பிரச்சனைகளுடன் பிறந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

எனவே பாதிக்கப்பட்ட பெற்றோர், தங்களுக்கு அந்த மருந்தை பரிந்துரை செய்த நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் மீதும் அந்த மருந்தை தயாரித்த நிறுவனமான Sanofi நிறுவனம் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்