சூரிச் விமான நிலையத்தில் சிக்கிய 48 வெளிநாட்டவர்கள்: வெளியான முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் சுமார் 4 டன் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் 48 பேரை கைது செய்துள்ளதாகவும் சூரிச் மண்டல பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சூரிச் கன்டோனல் காவல்துறை மற்றும் பெடரல் சுங்க நிர்வாகம் ஆகியவை ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சூரிச் விமான நிலையத்தில் இருந்து மொத்தமாக நான்கு டன் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள்,

65 முறை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதில், கோகோயின், ஹெராயின் மற்றும் ஹாஷிஷ் உள்ளிட்டவை அதிக அளவில் பறிமுதலானதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் அனைத்தும் பயணிகளில் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன,

அல்லது பொட்டலங்களாக எடுத்துச் செல்லப்பட்டன, அல்லது உடம்புக்குள் செலுத்தியோ, உடம்பில் மறைத்து வைத்தோ கடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த போதைமருந்துகள் பிரேசில் மற்றும் இஸ்ரேலில் இருந்து மட்டுமல்லாமல், இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்தும் சுவிட்சர்லாந்துக்கு கடத்தி வரப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் மொத்தம் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 16-ல் இருந்து 65 வயதுக்கு உட்பட்ட 26 ஆண்கள் எனவும் 22 பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் பிரேசில், இஸ்ரேல், அல்பேனியா, ஹாலந்து, போலந்து, ஸ்பெயின், உக்ரைன், டொமினிகன் குடியரசு, அமெரிக்கா, லாட்வியா மற்றும் பராகுவே ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் எனவும் சூரிச் கன்டோனல் காவல்துறை மற்றும் பெடரல் சுங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்