சுவிட்சர்லாந்து சைவநெறிக்கூடத்தினால் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ள உறவுகளுக்கு சுவிட்சர்லாந்து சைவநெறிக்கூடம் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கி வைத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவர் ஊடாக இவ்வுதவிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த சைவநெறிக்கூடம் 1994ம் ஆண்டு முதல் மன்றமாகவும், 2007ம் ஆண்டு முதல் தமிழ் விழிபாட்டுத் திருக்கோவிலையும் நிறுவி அறங்காவல் செய்து வரும் இம்மன்றம் ஈழத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தமிழ் உறவுகளுக்கும் ஏற்ப வாழ்வியல் உதவிகளை பேரிடர் காலத்திலிருந்து அளித்து வருகின்றது.

அந்த வகையில் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து தொடர் மழை, அதனைத் தொடர்ந்து குளங்களில் நீர் நிரம்பி வழிதலாலும், குளங்களின் வான் கதவுகள் திறக்கப்படுதல் போன்றவற்றின் காரணமாக பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ள உறவுகளுக்கு கடந்த 05. 01. 2020ம் திகதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வடக்கிலும், கிழக்கிலும் வாழும் மக்களுக்கு போருக்கு பின்னரான வாழ்விற்கும், இயற்கைப் பேரிடர் காலத்திலும் பெரும் உதவிகள் தேவையாக உள்ள நிலையில் ஒவ்வொரு தமிழரையும் தத்தமது வலுவிற்கேற்ப நேரடியாகவோ அல்லது அம்மண்ணில் பணிசெய்யும் பொது அமைப்புக்கள் ஊடாகவோ நல்லுதவிகளை சைவ நெறிக்கூடம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்