சைரன்களுடன் ட்ராமை துரத்திய சுவிஸ் பொலிசார்: எதற்கு தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ட்ராம் ஒன்றை சைரன்களுடன் பொலிசார் துரத்துவதை மக்கள் வியப்புடன் பார்த்தனர். இந்த சம்பவம் பேசலில் நடைபெற்றுள்ளது.

பேசலில் ட்ராமில் பயணித்த ஒருவர், இறங்கும்போது தனது மொபைல் போனை எடுக்க மறந்துவிட்டார்.

அதற்குள் ட்ராம் புறப்பட்டுவிட, அதன் பின்னாலேயே சிறிது தூரம் ஓடியிருக்கிறார் அவர். அப்படியும் ட்ராம் போய்விட, என்ன செய்வதென்று திகைத்த அவர், பொலிஸ் கார் ஒன்று வருவதை கவனித்துள்ளார்.

உடனே பொலிஸ் காரை கை காட்டி நிறுத்திய அவர், போக்குவரத்து அலுவலகத்துக்கு போன் செய்து தான் போனை தவறவிட்ட விடயத்தை தெரிவிக்கமுடியுமா என்று கேட்டுள்ளார். ஆனால், காரிலிருந்த பொலிசார் வேறொரு முடிவு எடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் சைரனை ஒலித்தபடி, எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டபடி ட்ராமை துரத்தியுள்ளனர்.

ஒரு வழியாக ட்ராமை நிறுத்தி, விடயத்தை ட்ராம் ஓட்டுநரிடம் விளக்கி, ட்ராமிலிருந்த போனை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர் பொலிசார்.

அந்த பொலிசாருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டு குவிகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்