குளிர்கால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் சுவிட்சர்லாந்தில் கோலாகல துவக்கம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
87Shares

சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில், 2020ஆம் ஆண்டுக்கான குளிர்கால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கின.

2020ஆம் ஆண்டுக்கான குளிர்கால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுகளின் துவக்க நிகழ்ச்சிகளை சுமார் 8,000 பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

சுவிட்சர்லாந்தின் இந்த ஆண்டிற்கான ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Simonetta Sommaruga, முறைப்படி ஒலிம்பிக் விளையாட்டுகள் துவங்குவதாக அறிவித்தார்.

2020ஆம் ஆண்டுக்கான குளிர்கால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒலிம்பிக் தலைநகரமான லாசேனிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும், St Moritz ரிசார்ட்டிலும் நடைபெற உள்ளன.

இந்த விளையாட்டு போட்டிகளில் உலகின் தலைசிறந்த 15 முதல் 18 வயது வரையுள்ள விளையாட்டு வீரர்கள் 1,880 பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதற்கிடையில், விளையாட்டுப் போட்டிகளுக்கான துவக்க நாள் விழாவின் ஆயத்த நிகழ்வுகளின்போது, பெரும் விபத்து ஒன்று நேரிட்டது.

ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீராங்கனை ஒருவர் பயிற்சியின்போது, ஐந்து மீற்றர் உயரத்திலிருந்து பனிக்கட்டி மீது விழுந்து பலத்த காயமடைந்தார். பின்னர் அவரது நிலைமை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Keystone / Jean-christophe Bott

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்