ஜெனீவா விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள்: பகீர் தகவலை வெளியிட்ட அதிகாரிகள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
292Shares

சுவிஸில் ஜெனீவா விமான நிலையத்தில் பயணிகள் அனைவரும் வெடிகுண்டு அச்சுறுத்தலை அடுத்து வெளியேற்றப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரமான ஜெனீவாவில் இயங்கிவரும் சர்வதேச விமான நிலையத்திலேயே வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத பெட்டி ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவலே கூச்சல் குழப்பத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள பெண் பயணி ஒருவர், திடீரென்று பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையத்தில் பெரும் கூச்சல் குழப்பம், ‘சாதாரண’ நிலைமைகளைச் சமாளிக்க முடியாத நிலை உள்ளது என ஒருவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜெனீவா விமான நிலையத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்,

வெளிப்படையாக கவனிக்கப்படாத ஒரு பெட்டி உள்ளது, அது ஒரு குண்டாக இருக்கலாம் என்று விமான நிலைய ஊழியர்கள் கவலைப்படுகிறார்கள் என மூன்றாவது நபர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனிடையே சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர், விமான நிலைய அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட பயணிகளை உள்ளே அனுமதித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்