வெளிநாட்டில் தமிழை மிக ஆர்வமாக கற்கும் ஈழத் தமிழர்கள்!

Report Print Nivetha in சுவிற்சர்லாந்து

உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளே இருக்க முடியாது. இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து சுவிட்சர்லாந்து சென்ற தமிழர்களில் பலர் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக அவர்களின் குழந்தைகளுக்கு தமிழை கற்று கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழ் பாடசாலைகள் இயங்கி வருகின்றது.

அங்கு வாழும் அனைவருக்கும் அவரவர் மொழியில் கல்வி கற்க வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சுவிட்சர்லாந்தில் இயங்கும் வள்ளுவன் தமிழ் பாடசாலையில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.

தமிழை ஆர்வத்துடன் பயிலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இந்த காணொளி எடுத்து காட்டாக உள்ளது.

இந்த காணொளி சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தாலும் தமிழின் தொன்மையை தேடும் பயணம் மாணவர்கள் மத்தியில் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணமாக இது உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்