ஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் ஆய்வாளர் தம்பதி: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில் கொல்லப்பட்டவர்கள்.

இதில் அஷ்ரப் ஹபீபாபாதி முனைவர் மாணவர் மட்டுமின்றி சுவிட்சர்லாந்தில் பணியாற்றியும் வந்துள்ளார்.

ஈரானில் உள்ள தங்களது உறவினர்களை சந்திக்க சென்ற இந்த தம்பதி, துரதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தகவலை நேற்றையதினம் சுவிஸ் கல்வித்துறை அதிகாரிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

குறித்த நபரின் இழப்பால் வாடும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உற்றாருக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிப்பதாக சுவிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்