பிறந்தநாளில் அவரை எதிர்பார்த்தேன்: சுவிஸில் மாயமான தமிழர் தொடர்பில் கலங்கும் அவரது மகன்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கடந்த ஒரு மாதகாலமாக மாயமான தமிழர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை என அவரது மகன் கவலை தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கடந்த 30 ஆண்டுகளாக குடியிருந்து வந்தவர் தற்போது 55 வயதாகும் உதயகுமார் ராயரட்னம்.

இவரையே கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

குறித்த நபரை தேடும் பணியினை முன்னெடுத்த காவல்துறையினருக்கும் சரியான விடை கிடைக்காத நிலையில் அவரை தேடுவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தமது தந்தை தொடர்பில் பகிர்ந்து கொண்ட 22 வயது ரதூஷன் உதயகுமார்,

தமது தந்தை திடீரென்று மாயமானதன் காரணம் என்னவென்று இதுவரை தங்களால் கண்டறியமுடியவில்லை என தெரிவித்துள்ளார்.

அவர் உயிருடன் இருப்பதாக ஒரு அறிகுறி மட்டுமே கிடைத்தால் போதும், எஞ்சிய நடவடிக்கைகளை மிக எளிதாக முன்னெடுப்போம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Picture: Suritha Rasaratnam

அவர் மாயமாவதற்கு முன்னர், குடும்பத்தினர் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை சிறப்பிக்க முடிவு செய்திருந்ததாகவும்,

இந்த ஒரு நாளில் அவர் வீடு திரும்புவார் என மிகவும் நம்பிக்கையுடன் இருந்ததாகவும் ரிதூஷன் கண் கலங்கியுள்ளார்.

மட்டுமின்றி இந்த இடைப்பட்ட காலத்தில் தமது பிறந்தநாள் எனவும், தமது பிறந்தநாளுக்கும் தந்தை வரவில்லை என்பது தாங்க முடியவில்லை என அந்த இளைஞர் தமது தவிப்பை பதிவு செய்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நெருக்கடியை எதிர்கொள்பவரல்ல உதயகுமார் என கலங்கும் உறவினர் ஒருவர்,

அவரை தேடும் முயற்சியை நாங்கள் விட்டுவிடுவதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கண்டிப்பாக அவர் தொடர்பில் உறுதியான தகவல் ஒன்று கிடைக்கும் மட்டும் எங்கள் தேடுதல் தொடரும் என உதயகுமாரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் மண்டல பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி 062 871 13 33 என்ற தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்