சுவிஸில் கேட்பாரற்று கிடந்த பையில் கட்டுக்கட்டாக பணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Graubünden மண்டலத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் கட்டுக்கட்டாக டொலர்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சுவிஸ் ரயில்வே ஊழியர் ஒருவரே குறித்த பணப்பையை கண்டெடுத்துள்ளார். உடனடியாக அந்த 32 வயது ஊழியர் மண்டல பொலிசாரை தகவல் அறிவித்துள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட சோதனையில் அந்த பையில் மொத்தம் 20,000 டொலர்கள் தொகையை கண்டெடுத்துள்ளனர்.

மண்டல பொலிசார் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், குறித்த ரயில்வே ஊழியர் தோணி ஒன்றில் இருந்து அந்த பையை மீட்டுள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில். குறித்த பையானது சீன நாட்டவர் ஒருவரின் பை என தெரியவந்தது.

தொடர்ந்து அந்த பையை அவரிடம் உரிய விசாரணைக்கு பின்னர் பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.

ஆனால் காணாமல் போன தமது பையை மீட்டெடுத்த ரயில்வே ஊழியருக்கு தகுந்த சன்மானம் வழங்கியுள்ளார் அந்த சீனத்து சுற்றுலாப்பயணி.

குறித்த தொகையானது தமக்கு சொந்தமானது அல்ல எனவும், தாம் பணியாற்றும் நிறுவனத்தின் பணம் எனவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்