திருடிய இளம்பெண் மீது தாமதமாக புகாரளித்த பல்பொருள் அங்காடிக்கு சிக்கல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பல்பொருள் அங்காடியில் திருடிய ஒரு இளம்பெண் மீது தாமதமாக புகாரளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த பல்பொருள் அங்காடி மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெர்னுக்கு அருகிலுள்ள Migros நிறுவனத்துக்கு சொந்தமான பல்பொருள் அங்காடி ஒன்றில் நவம்பர் மாதம் ஒரு 16 வயது பெண் திருடியிருக்கிறாள். ஆனால் அவள் மீது உடனடியாக புகாரளிக்காமல், அந்த நிறுவனம் தொடர்ந்து அவளை கண்காணித்துள்ளது.

அந்த பெண் 22 முறை திருடிய பின்னரே, அவர் மீது திருட்டு குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ளன.

எனவே அந்த நிறுவனம் அந்த பெண்ணை உளவு பார்த்ததாக அதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒருவர், அந்த நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்கிறார்.

அத்துடன், ஃபெடரல் தரவு பாதுகாப்பு அலுவலகமும் முதல் திருட்டு நடந்தபோதே 24 மணி நேரத்திற்குள் அவள் விசாரிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கூறியுள்ளது.

300 ஃப்ராங்குகள் மதிப்புள்ள பொருட்களை அந்த பெண் திருடியதாக அவள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்