சுவிஸில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிய மர்ம நபர்கள்..! பிடித்து விசாரித்ததில் வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை

Report Print Basu in சுவிற்சர்லாந்து

கடந்த ஆகஸ்ட் மாதம் டாவோசில் சந்தேகிக்கப்படும் இரண்டு ரஷ்ய உளவுத்துறை முகவர்களை பொலிசார் கைது செய்ததாக சுவிஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

டேஜஸ்-அன்ஸிகர் செய்தித்தாள் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு ரஷ்யர்களும் ஆகஸ்டில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.

டாவோசில் தற்போது நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டை உளவு பார்ப்பதற்காக அவர்கள் ஆயத்த பணிகளை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக அது கூறியது.

இரண்டு ரஷ்யர்களும் விலையுயர்ந்த ஆல்பைன் ரிசார்ட்டில் மூன்று வாரங்கள் தங்க திட்டமிட்டிருப்பதை அறிந்த கிராபுண்டன் மாகாண பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனினும், செய்தித்தாள் சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை, அல்லது அவர்கள் எந்த வகையான உளவு நடவடிக்கைகளைத் திட்டமிட்டார்கள் என்றும் குறிப்பிடவில்லை.

எனினும், விசாரணைக்கு பின்னர், இருவரும் விடுவிக்கப்பட்டதாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

கடந்த ஆக்ஸ்டில் இரண்டு ரஷ்யர்களை கைது செய்யப்பட்டதை உறுதி செய்த க்ராபண்டன் பொலிசார், இருவரும் ரஷ்ய அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தூதரக பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இப்பகுதியில் உள்ள ஏராளமானோரின் ஆவணங்களை தவறாமல் சோதித்து வருவதாக கூறிய பொலிசார், ரஷ்யர்கள் தொடர்பில் மேலதிக விபரங்களை வழங்கவில்லை.

ஒன்றுமில்லாத ஒரு விஷயத்தை பிரச்சினையாக தூண்டிவிட செய்தித்தாள் முயற்சிக்கிறது என்று பெர்னில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் வணிகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் டாவோசில் ஆண்டுதோறும் நடைபெறும் உலக பொருளாதார மாநாடு செவ்வாய்க்கிழமை முன்னதாக சுவிஸ் நகரில் தொடங்கியது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers