உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வியாதி: சுவிஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சீனாவின் வுஹான் உள்ளிட்ட 14 நகரங்கள் உயிர் கொல்லும் கொரோனா வியாதி காரணமாக முடங்கியுள்ள நிலையில், சுவிஸ் மக்கள் எவரேனும் இந்த நகரங்களில் சிக்கியுள்ளனரா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் உள்ளிட்ட 14 நகரங்களில் வாழ்க்கை மொத்தமாக முடங்கியுள்ள நிலையில், குறிப்பிட்ட நகரங்களில் சுவிஸ் மக்கள் எவரேனும் உள்ளனரா அல்லது உங்களுக்கு அறிமுகமானவர்கள் எவரேனும் உள்ளனரா என அதிகாரிகள் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனிடையே சுவிஸ் உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலில், 8 சுவிஸ் குடிமக்கள் வுஹான் நகரில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

வுஹான் நகரில் அமைந்துள்ள மீன் சந்தையில் இருந்தே உலக நாடுகளை அச்சுறுத்தும் இந்த உயிர் கொல்லி கொரோனா வியாதி முதன் முறையாக பரவியதாக கூறப்படுகிறது.

தற்போது வுஹான் நகரம் மட்டுமின்றி சீனாவின் Huanggang மற்றும் Ezhou நகரங்களும் தீவிர கண்காணிப்பில் உட்படுத்தப்பட்டுள்ளது.

வுஹான் நகரில் மட்டும் 350,000 பேர் பாதிப்புக்கு உள்ளானதாகவும் அதில் 900 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை கொரோனா வியாதியால் மொத்தம் 26 பேர் மரணமடைந்துள்ளனர். இதனிடையே பிரான்சில் இருவருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்த் இந்த விவகாரம் தொடர்பில் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், தயார் நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்