கொரோனா பீதி: சுவிட்சர்லாந்தில் இனவாத தாக்குதலுக்கு இரையாகும் ஆசிய நாட்டவர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சீனாவின் வுஹான் நகரில் இருந்து கொரோனா வியாதி உருவெடுத்துள்ளதால், சுவிட்சர்லாந்தில் ஆசிய நாட்டவர்கள் இனவாத தாக்குதலுக்கு இரையாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ள கொரோனா வியாதிக்கு இதுவரை 212 பேர் மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வியாதிக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் ஏதும் இல்லை என்பதால் வரும் நாட்களில் மரண எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகலாம் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி பல ஆயிரக் கணக்கானோர் நோய் அறிகுறிகளுடன் தீவிர கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா நோய் தொடர்பில் உலகளாவிய அவசர நிலையை பிரகனப்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், சுமார் 50 பேர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

இதனிடையே ஆசிய நாட்டவர்கள் என்பதால் சுவிட்சர்லாந்தில் பலர் இனவாத தாக்குதலுக்கு இலக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி பலர் சமீப நாட்களில் சுவிட்சர்லாந்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியும் வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்