கொரோனா வைரஸ்: எல்லோரும் சீனாவை விட்டு ஓடும் நிலையில் வுஹானுக்கு திரும்பியுள்ள சுவிட்சர்லாந்துக்காரார்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

உலகின் அத்தனை நாடுகளில் உள்ளவர்களும் சீனாவை விட்டு தலை தெறிக்க சொந்த நாடுகளுக்கு ஓட்டம் பிடிக்கும் நிலையில், ரிஸ்க் எடுத்து தனது குடும்பத்துடன் வுஹானுக்கே சென்றுள்ளார் ஒரு சுவிஸ் குடிமகன்.

ஜெனீவாவைச் சேர்ந்த Emmanuel Mathias Geebelen (42) வுஹானில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அவரது மனைவி ஒரு சீனர், அவரது பெயர் Connie (28).

Emmanuel தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக ஹொங்ஹொங் சென்றிருந்தார்.

இந்நிலையில்தான், வுஹானிலிருந்து வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

சரி, ஹொங்ஹொங்கிலேயே இருந்துவிடலாம் என்றால், Emmanuelஇன் மனைவி மற்றும் பிள்ளைகளின் விசா முடிவடையும் நேரம் வந்துவிட்டது.

Emmanuelக்கு சுவிஸ் பாஸ்போர்ட் இருப்பதால் அவர் என்ன வேண்டுமானாலும் முடிவெடுத்திருக்கலாம்.

ஆனால் குடும்பத்தை அழைத்துக்கொண்டும் சுவிட்சர்லாந்துக்கு போக முடியாது, மனைவி பிள்ளைகளை விட்டு விட்டு சுவிட்சர்லாந்து செல்லவும் அவருக்கு மனமில்லை. எனவே, குடும்பத்துடன் இருப்பதென முடிவெடுத்தார் அவர்.

Dennis Lindbom

ஆகவே, குடும்பமே மீண்டும் வுஹானிலிருக்கும் தங்கள் வீட்டை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் ரயில் ஒன்றில் ஏறி, எப்படியோ ஒருவழியாக வீடு திரும்பியது குடும்பம்.

இங்கு வந்து பார்த்தால் ஒரே ஒரு பல்பொருள் அங்காடி மட்டும் திறந்திருக்கிறது. மக்களின் அவசர தேவைகளை சந்திப்பதற்காக, அரசு உத்தரவுப்படி அந்த அங்காடி திறந்து வைக்கப்பட்டுள்ளதாம்.

அங்கு சென்று தேவையான உணவுக்கான பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டில் முடங்கியிருக்கிறது குடும்பம்.

வீட்டில், கைகளை ஆல்கஹால் கொண்டு கழுவி சுத்தமாக வைத்துக்கொண்டு, கதவை மூடி வைத்துக்கொண்டு கவனமாக இருக்கிறார்கள் குடும்பத்தார்.

Emmanuelஇடம் கவலைப்படுகிறீர்களா என்று கேட்டால், இல்லை என்கிறார். கவலைப்படுவதனால் எந்த பயனும் இல்லை என்று கூறும் அவர், சீன அரசு நோய் பரவாமல் இருப்பதற்காக எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

சுவிட்சர்லாந்து அரசு தன் நாட்டு மக்களை மீட்டுக்கொண்டுவர திட்டமிட்டு வருகிறதென்றாலும், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் அதுவும் கடினம்தான்.

நாங்கள் இங்குதான் இருக்கப்போகிறோம் என்று அழுத்தம் திருத்தமாக கூறும் Emmanuel, பயணம் செய்து மீண்டும் தனது குடும்பத்தை அபாயத்திற்குள்ளாக்க விரும்பவில்லை என்கிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்