சாக்லேட்டை காட்டி சிறுவர்களை கவர முயன்ற நபர்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் தலைநகரான பெர்ன் நகரில், சிறுவர்களை சாக்லேட்டைக் காட்டி கவர முயலும் ஒரு நபர் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

கருப்பு நிற கார் ஒன்றில் இருந்த ஒருவர், பள்ளி மாணவர்கள் சிலரை சாக்லேட் மற்றும் பொம்மைகள் தருவதாக ஆசை காட்டி தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால், அந்த மாணவர்கள் சாக்லேட்டுக்கும் பொம்மைக்கும் மயங்காமல், விடயத்தை பள்ளிக்கு தெரிவித்துள்ளனர்.

எனவே, பெர்னில் உள்ள மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளி சார்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பள்ளிக்கு செல்லும்போது, மாணவ மாணவியர் தனியாக செல்லாமல் எப்போதும் இரண்டு பேராக செல்லுமாறு பொலிசார் அவர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்