சூரிச் விமானத்தில் ஊழியருக்கு உடல் நலக்குறைவு: விமான நிலையத்தில் பரபரப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

நியூயார்க்கிலிருந்து சூரிச் வந்த விமானம் ஒன்றின் ஊழியர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அது கொரோனா வைரஸ் தொற்றாக இருக்குமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் விமானத்தில் தனிமையாக ஒரு இடத்தில் அமர வைக்கப்பட்டார்.

விமானம் சூரிச் வந்தடைந்ததும் தொற்று நோய் சிறப்பு மருத்துவர்கள் விமானத்தில் ஏறினர்.

அந்த விமானத்தில் 121 பயணிகளும், 13 விமான ஊழியர்களும் பயணித்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஊழியரின் அருகில் அமர்ந்திருந்த பயணிகளும் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டனர்.

பின்னர் படிவம் ஒன்றை நிரப்பி, தங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட விமான ஊழியரை சூரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சோதித்தார்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண ப்ளூதான் என்பது தெரியவர, அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்