சுவிட்சர்லாந்தில் முதல் நிர்வாண உணவகம்: இயற்கை ஆர்வலர்கள் ஆதரவு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் முதல் முறையாக நிர்வாண உணவகம் ஒன்றை திறக்க ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சுவிட்சர்லாந்தில் பல ஆண்டுகளாக பாலியல் விடுதிகளை நடத்திவரும் நபர் ஒருவர் இந்த நிர்வாண உணவகத்தை திறக்க உள்ளார்.

பிப்ரவரி இறுதியில் இருந்து பாஸல் நகரில் நிர்வாண உணவகம் செயல்பாட்டில் வரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

குறித்த உணவகமானது நிர்வாணப் பிரியர்களையும் சாதாரண பொதுமக்களையும் ஈர்க்கும் வகையில் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உணவகம் தொடர்பில் இயற்கை ஆர்வலர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அவர்களின் நோக்கம் சரியாக இருந்தால், இது நிச்சயமாக இயற்கை இயக்கத்திற்கு ஒரு உயர்வைக் கொடுக்கும் என 58 வயதான Marcello Foggetta தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்