சுவிட்சர்லாந்தில் அவசர அவசரமாக கொன்று எரிக்கப்பட்ட பசு: புதிய உயிர்க்கொல்லி நோய் காரணம்?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் புதுவகை கால்நடை நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பசு ஒன்று அவசர அவசரமாக கொன்று எரிக்கப்பட்டது.

Mad cow disease என்பது கால்நடைகளைத் தாக்கும் வழக்கமான நோய்தான் என்றாலும், இம்முறை அந்த பசுவை தாக்கியுள்ளது வழக்கத்தை விட வித்தியாசமான நோய்க்கிருமியாகும்.

ஆனால், அந்த கிருமியால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தாக்கியுள்ளது என்று தெரியவந்ததும், அந்த 13 வயது பசு உடனடியாக கொல்லப்பட்டு அதன் உடல் எரியூட்டப்பட்டது என பெடரல் உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மற்ற கால்நடைகளுக்கு அந்த நோய் பரவாமல் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1986இல் முதன்முதலாக பிரித்தானியாவில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டபோது, நாடெங்கும் பெரும் பீதி உருவானதுடன் அது பல ஆண்டுகளுக்கு நீடித்தது.

அந்த காலகட்டத்தில், பிரித்தானிய மாட்டிறைச்சியை வாங்கவேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியம் உலக நாடுகளுக்கு தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது,

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்