சுவிஸ் சிறைகளில் கருணைக்கொலைக்கு அனுமதி?: ஆனால் மருத்துவர்கள் உதவி கிடையாது!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் சிறைகளில் நோய்வாய்ப்பட்ட கைதிகள் கருணைக்கொலை செய்யப்படுவதை அனுமதிக்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

2018இல் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் கருணைக்கொலைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்ததையடுத்து இந்த விடயம் கவனம் ஈர்த்துள்ளது.

சிறைத்தண்டனை வழங்கும் சுவிஸ் மாகாணங்கள், சிறைகளில் கருணைக்கொலையை அனுமதிப்பதற்கு சம்மதித்துள்ளன.

என்றாலும், எப்படி அதை நிறைவேற்றப்போகின்றன என்பதில் மாகாணத்துக்கு மாகாணம் வித்தியாசம் காணப்படும்.

அது குறித்து நிபுணர் குழு ஒன்று நவம்பர் மாதம் ஆலோசனை வழங்க உள்ளது. சுவிட்சர்லாந்தில், கருணைக்கொலை செய்யப்படும் நபர், தனக்குத்தானே கருணைக்கொலை செய்துகொள்ள சட்டம் அனுமதியளிக்கிறது.

அதாவது, விஷ ஊசி போடுவதற்கு மருத்துவர்கள் யாரும் உதவி செய்யமாட்டார்கள். மேலும், ஒருவர் கருணைக்கொலைக்கு தானே முன்வந்தும் தொடர்ந்தும் மனப்பூர்வமாக விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு அனுமதியளிக்கப்படும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்