சுவிட்சர்லாந்தில் பறவை காய்ச்சல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சீனா உள்ளிட்ட 28 நாடுகளில் கொரோனா கிருமி ஆட்டிப்படைக்கும் நிலையில், சுவிட்சர்லாந்தில் பறவை காய்ச்சல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் செல்லப் பிராணிகள் உள்ளிட்ட கால்நடைகளை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

போலந்தில் வான்கோழி வளர்க்கும் பகுதிகளில் இருந்து இந்த பறவை காச்சல் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலந்து மட்டுமின்றி ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் செக் குடியரசு நாடுகளிலும் பறவை காய்ச்சல் தொடர்பில் பாதிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய பறவை காச்சலானது ரஷ்யாவில் இருந்து உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஜேர்மனியில் ஒரு காட்டு பறவையிலும் மிகவும் அபாயகரமான இந்த வைரஸ் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட பறவை காச்சல் காரணமாக சுவிஸில் 376 கால்நடைகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 121 வழக்குகள் உறுதி செய்யப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்