வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நடைமுறையை கடினமாக்கியுள்ள சுவிஸ் மாகாணம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்திலுள்ள Aargau மாகாண குடிமக்கள், வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை கடினமாக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பு ஒன்றில், 64.8% பேர், மாகாண நாடாளுமன்றம் வெளிநாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக எடுத்த முடிவை ஆதரித்து வாக்களித்துள்ளார்கள்.

வலதுசாரியினர் அந்த சட்டத்திருத்தத்தை ஆதரிக்க, எதிர்த்து வாக்களித்த இடது சாரியினர் மற்றும் நடுநிலைவாதிகள் வாக்கெடுப்பில் தோற்றுப்போனார்கள்.

அந்த சட்டத்தின்படி, கடந்த பத்தண்டுகளாக அரசு உதவித்தொகை பெறாதவர்கள் மட்டுமே குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன் அவர்கள் சுவிஸ் பாஸ்போர்ட் பெறவேண்டுமானால், தேர்வு ஒன்றிலும் வெற்றி பெறவேண்டும்.

நாட்டின் அரசியல், சமூகம், வரலாறு மற்றும் புவியியல் குறித்த கேள்விகள் அத்தேர்வில் இடம்பெறும்.

இது பாரபட்சமான செயல் என இடதுசாரியினர் இந்த சட்டத்திருத்தத்தை விமர்சித்திருந்தனர்.

ஆனால், அரசு உதவிகள் தேவையற்ற வகையில் கொடுக்கப்படுவதை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைதான் என வலதுசாரியினர் வாதிடுகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்