சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை செய்யப்பட்ட யானை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கருணைக் கொலைக்கு பேர் போன சுவிட்சர்லாந்தில் யானை ஒன்று கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் 1969இல் பிறந்த Maxi என்ற அந்த ஆண் யானை, பிறந்து இரண்டாண்டுகளுக்குப்பின் முதலில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது.

பல்வேறு உயிரியல் பூங்காக்கள் மற்றும் சர்க்கஸ்களில் வலம் வந்த Maxi, 1981ஆம் ஆண்டு சூரிச் உயிரியல் பூங்காவிற்கு வந்தது.

மக்களைக் கவர்ந்த Maxiயின் சிறப்பம்சமே அதன் நீண்டு வளைந்த தந்தங்கள்தான். அது மட்டும் அவ்வப்போது தனது தந்தங்களின் நுனியை சிறு துண்டுகளாக உடைக்காமல் இருந்தால், மூன்று மீற்றர் நீளத்தை அவை எட்டியிருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு.

இந்நிலையில், தற்போது 50 வயதாகும் Maxiயின் உடல் நலம் பாதிக்கத் தொடங்கியது. அதன் உடல் வெகுவாக மெலியத்தொடங்கியது.

Maxiயின் தந்தங்கள் மிகப்பெரியதாக இருப்பதால், அதற்கு கொடுக்கப்படும் உணவிலிருந்து போதுமான சத்துக்களை அதன் உடலால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. பல சத்துப்பொருட்கள் கொடுக்கப்பட்டும், மருத்துகள் கொடுத்தும், அதனால் எழுந்து நிற்கவே முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

எனவே, நேற்று Maxi கருணைக்கொலை செய்யப்பட்டது. அதன் உடல் சூரிச் கால்நடை மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் தந்தங்கள் சூரிச் உயிரியல் பூங்காவிற்கே அனுபிவைக்கப்படும். Maxiக்கு 12 பிள்ளைகளும் 21 பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்களாம்!

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...