என்னைச் சுற்றி 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: சீனாவில் சிக்கித் தவிக்கும் சுவிஸ் இளைஞர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இருந்து சீனாவுக்கு குடியேறிய இளைஞர் ஒருவர் முதன் முறையாக அங்குள்ள தற்போதைய சூழ்நிலை குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

சீனாவில் கொரோனா பாதிப்பு மிகுந்து காணப்படும் வுஹான் நகரில் இருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் உள்ள குவாங்டாங் பகுதியில் குடியிருந்து வருகிறார் 28 வயதான அந்த சுவிஸ் இளைஞர்.

இவரே தற்போது அங்குள்ள சூழல் தொடர்பில் முதன் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். குவாங்டாங் பகுதியில் குடியேறியுள்ள அவர், அங்கே தொழில் நிறுவனம் ஒன்றை முன்னெடுத்து வருகிறார்.

இங்குள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் இருப்பதாக கூறும் அவர், பெரும்பாலான மக்கள் குடியிருப்பை விட்டு வெளியே செல்லவும் அஞ்சுவதாக பதிவு செய்துள்ளார்.

நாளுக்கு நாள் சூழ்நிலை மிகவும் மோசமடைவதாக கூறும் அவர், தற்போது தாம் குடியிருக்கும் பகுதியில் சுமார் 300 முதல் 400 பேர் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

குவாங்டாங் பகுதியில் மட்டும் சுமார் 1,000 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்து வருவதாக கூறும் அவர், சுகாதார அதிகாரி ஒருவர் சமீபத்தில் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி குவாங்டாங் பகுதியில் தற்போது பொதுமக்கள் மருத்துவ முகமூடி அணிவது கட்டாயம் என அறிவித்துள்ளனர்.

உணவு விநியோகம் இதுவரை சுமூகமாக நடப்பதாகவும், ஆனால் தமது நிறுவனம் செயல்படுவது தடைப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

குவாங்டாங்கிற்கு வெளியே இருந்து வேலைக்குத் திரும்பும் மக்கள் இரண்டு வாரங்களுக்கு கண்டிப்பாக தீவிர கண்காணிப்பில் இருத்தல் வேண்டும் என்று சீன அரசாங்கம் தற்போது அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ஆனால் சுவிஸ் நாட்டவரின் நிறுவனத்தில் பணியாற்றும் உழியர்கள் அனைவரும் நகருக்கு வெளியே இருந்து வருபவர்கள்.

இதனால் அவர்களை தனியாக ஒரு அறையில் தங்க வைத்து கண்காணிக்கப்படுவதாக இவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே தமது நிறுவனம் கடந்த பல நாட்களாக மூடப்படும் சூழலை எதிர்கொண்டுள்ளது எனவும், இந்த நிலை மேலும் சில நாட்கள் நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழில் நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டுள்ளது. சுற்றுலா முற்றாக முடங்கியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்