ஜெனீவா ஐ.நா சபை முன்றலில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவெழுச்சி நாள்!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் உருக்கி உலகின் மௌனம் கலைக்கத் துணிந்த ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவுநாள் நேற்று மிகவும் உணர்வு பூர்வமாக ஜெனீவாவில் நினைவு கூரப்பட்டுள்ளது.

ஜெனீவா ஐ.நா சபை முன்றலில் நினைவு வணக்க ஒன்றுகூடலில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது தமிழ் இன விடுதலைக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த அனைத்து தியாகியர்களையும் நினைவுகூர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்