சுவிட்சர்லாந்தில் பணி நேரத்தின் போது வகுப்பறையில் ஆபாச படம் பார்த்த ஆசிரியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெர்ன் மாகாணத்திலுள்ள உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் பணி நேரத்தின்போது அமர்ந்து ஆபாசப் படம் பார்த்ததை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளதாக தெரிகிறது.
புகைப்பட ஆதாரத்துடன் சிக்கியதையடுத்து அந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Langenthaயிலுள்ள அந்த பள்ளி இது குறித்து கருத்துக்கூற மறுத்துவிட்டது.
ஆனால், கடமை தவறியதாக தனது பள்ளி ஆசிரியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதை அந்த பள்ளி உறுதி செய்துள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஆசிரியருக்கு பதிலாக புதிய ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.