சுவிஸில் ஐ.எஸ் நடத்தவிருந்த தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு..! ஓர் ஆண்டிற்கு பின் உண்மையை வெளியிட்ட அதிகாரி

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சவிட்சர்லாந்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தவிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் சதிதிட்டம் முறியடிக்கப்பட்டதாக ஜெனீவா மாநில கவுன்சில் உறுப்பினர் மௌரோ போக்கியா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் Le Temps செய்தித்தாளுக்கு பேட்டியளித்த மௌரோ போக்கியா இச்சம்பவத்தை வெளிப்படத்தினார்.

இந்த தாக்குதல் 2019 ஆண்டு நடந்திருக்கும் என்று மௌரோ பேட்டியில் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் உதவியுடன் சுவிஸ் உளவுத்துறை, ஜெனீவா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வெர்னியர் நகராட்சியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ஐ.எஸ் நடத்தவிருந்த தாக்குதலை முறியடிக்க முடிந்தது.

ஐ.எஸ் இயக்கத்தால் நியமிக்கப்பட்ட சுவிஸ் நாட்டினரின் குழு, ஏப்ரல்-மே 2019ல் எண்ணெய் கிடங்கைத் தாக்க திட்டமிட்டனர். அவர்களின் திட்டங்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதை அடுத்து தாக்குதலைத் தடுக்க முடிந்தது.

தாக்குதல் குறித்த எச்சரிக்கையைப் பெற்ற பிறகு, ஜெனீவா காவல்துறை எண்ணெய் கிடங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது என மௌரோ போக்கியா தெரிவித்தார்.

ஜெனீவாவில் வசிப்பவர்கள் என சந்தேகிக்கப்படும் குற்றவாளி, பெட்டிட்-சாகோனெக்ஸ் மசூதி தொழுகையில் அடிக்கடி கலந்து கொண்டார். அவர் 2015ல் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்ததாக நம்பப்படுகிறது, தற்போது அவர் சிரிய குர்திஸ்தானில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்