கொடூரமாக கொல்லப்பட்ட மல்யுத்த வீரர்: சுவிட்சர்லாந்தில் மறைந்திருக்கும் குற்றவாளிகள்?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

போலந்து நாட்டில் வளர்ந்து வரும் மல்யுத்த வீரர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ள சுவிஸ் பொலிசாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

போலந்து நாட்டின் Poznan பகுதியில் ஜனவரி இறுதியில் மல்யுத்த வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, கோமா நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

29 வயதேயான அந்த வீரர் போலந்தின் Poznan பகுதியில் மிகவும் பரபலம் என கூறப்படுகிறது. இவரது பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர் 42 வயதான Olgierd Michalski என்பவர்.

இவரே குறித்த மல்யுத்த வீரரை வாக்குவாதம் ஒன்றின் இறுதியில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த மல்யுத்த வீரர், கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார்.

ஆனால் இரண்டு நாட்களுக்கு பின்னர் மூளைச்சாவடைந்த அந்த மல்யுத்த வீரர் மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளார்.

இந்த விவகாரம் நடந்த பின்னர் பயிற்சியாளர் Olgierd Michalski சுவிட்சர்லாந்துக்கு மாயமானதாக போலந்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தற்போது அவரது புகைப்படங்களை வெளியிட்ட போலந்து பொலிசார், குறித்த நபரை கைது செய்து ஒப்படைக்கும்படி சுவிஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்