உயிருடன் இருக்கும் சுவிஸ் தாயாருக்கு 4 ஆண்டுகளாக வரும் இரங்கல் கடிதம்: அதிர்ச்சியில் மகள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியில் குடியிருக்கும் தாயார் ஒருவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக தபாலில் இரங்கல் கடிதம் வருவது, அவரது மகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியில் குடியிருக்கும் 30 வயதான பெண்மணி, தமது தாயாருக்கு கடந்த 4 ஆண்டுகளாக தபாலில் இரங்கல் கடிதம் வந்தவண்னம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

66 வயதான தமது தாயார் தற்போதும் உயிருடன் இருப்பதாக கூறும் அவர், இது உண்மையில் தம்மை தொடர்ந்து பீதியில் ஆழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமது தாயாரை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்கும் சூழலில் இருக்கும் தமக்கு,

அவர் இறந்துவிட்டார் என கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து தபாலில் இரங்கல் செய்தி வருவது பயப்படும் படியாக உள்ளது என்றார்.

இதன் காரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அவருக்கு, தமது தாயார் விவாகரத்து பெற்ற பின்னர், பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும்,

அதன் பின்னரே, அவருக்கு இரங்கல் செய்தி வருவதும் கண்டறிந்துள்ளார். தாயாரின் பெயர் மாற்றப்பட்ட பின்னர், அவரது முந்தைய பெயரில் தவறுதலாக இறந்துவிட்டார் என ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

இதுவே தற்போது இரங்கல் செய்தியாக தொடர்ந்து வர காரணமாக அமைந்துள்ளது.

இதை சுவிஸ் தபால் அதிகாரியும் தற்போது உறுதி செய்ததுடன், அதை திருத்த நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்