இத்தாலியிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பொடி நடையாக நடந்த நபர்: பல ஆயிரங்கள் செலவு வைத்த முடிவு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இத்தாலியிலிருந்து சுவிட்சர்லாந்து செல்லும் ரயிலை தவறவிட்ட ஓருவர் பொடிநடையாக நடந்தே செல்ல எடுத்த முடிவால் பல ஆயிரங்கள் செலவு ஏற்பட்டிருக்கிறது.

19 வயது இளைஞர் ஒருவர் பயங்கர மதுபோதையிலிருந்தார். இத்தாலியின் Domodossolaவிலிருந்து வலாயிஸிலுள்ள Brig செல்வதற்கான ரயிலை தவறவிட்டார் அவர்.

சரி, நடந்தே சென்றுவிடலாம் என முடிவெடுத்த அவர், அதற்காக Simplon சுரங்க ரயில் பாதை வழியாக நடக்கலானார்.

தனது மொபைலிலுள்ள டார்ச் வெளிச்சத்தில் நடக்கத் தொடங்க, பாதி வழியில் மொபைலின் சார்ஜ் தீர்ந்துபோனது.

எனவே, இருட்டிலேயே அடுத்த இரண்டு மணி நேரம் நடந்துள்ளார் அவர். சுமார் 17 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்தபின், ரயில் சாரதி ஒருவர் அவரைக் கண்டு அவரை மீட்க ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால், நீதிமன்றம் ஒன்று அவருக்கு 1,200 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்துள்ளது.

அத்துடன், வழக்குச் செலவாக 1,150 சுவிஸ் ஃப்ராங்குகள் செலுத்தவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது போதாதென்று, ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதற்காகவும், மீட்பு பணிக்காகவும், மேலும் பல ஆயிரம் ஃப்ராங்குகள் கட்டணம் விதிக்கப்பட, நடந்து வந்து செலவை மிச்சம் பிடிக்க தான் எடுத்த முடிவு இவ்வளவு செலவு வைத்துவிட்டதே என கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்கிறார் அவர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...