கடத்தப்பட்ட இரட்டை சகோதரிகள்: புகைப்படத்தை வெளியிட்டு கதறும் சுவிஸ் தாயார்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் வோட் மண்டலத்தில் தந்தையால் கடத்தப்பட்ட இரட்டை சகோதரிகளை மீட்க உதவுமாறு, சுவிஸ் தாயார் ஒருவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் Saint-Sulpice பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வந்த 43 வயது தந்தை ஒருவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் தமது இரட்டையர்களான மகள்களை கடத்திச் சென்றுள்ளார்.

அலெசியா மற்றும் லிவியா ஸ்கெப் என்ற இருவருக்கும் தற்போது 15 வயதிருக்கும் என கூறும் அவர்களது தாயார்,

கணினி மூலம் வடிவமைக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தமது பிள்ளைகள் இருவரையும் மீட்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

9 ஆண்டுகளுக்கு முன்னர் லாசன்னே அருகே Saint-Sulpice பகுதியில் குடியிருந்த அந்த 43 வயது தந்தை திடீரென்று ஒருநாள் தமது இரட்டையர்களுடன் மாயமாகியுள்ளார்.

முதலில் பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற அவர் பின்னர் அங்கிருந்து இத்தாலிக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.

பிள்ளைகளுடம் மாயமாகி ஒருவார காலம் கடந்த நிலையில் இத்தாலியில் வைத்து Cerignola பகுதியில் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் அந்த தந்தை.

சம்பவத்தின் போது வெறு 6 வயதேயான அந்த இரட்டையர்கள் சிறார்கள் தொடர்பில் அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை.

அவர்களை அந்த தந்தை கொலை செய்த பின்னர் தான் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பிலும் தகவல் இல்லை.

விவாகரத்து கோரிய மனைவியை பழிவாங்க மேற்கொண்ட இந்த கடத்தலில், சிறார்கள் இருவரும் உயிருடன் உள்ளனரா என பொலிஸ் விசாரணையிலும் துப்புத் துலங்கவில்லை.

கடற்பயணத்திற்காக குறித்த நபர் தமது பிள்ளைகள் இருவருக்கும் சேர்த்து பயணச் சீட்டு வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த பயணத்தில் பிள்ளைகள் இருவரையும் அவர் கடலில் வீசினாரா என்ற சந்தேகமும் விசாரணை அதிகாரிகளுக்கு உள்ளது.

தற்போது 53 வயதாகும் அந்த தாயார் நீண்ட 9 ஆண்டுகளாக நம்பிக்கையை இழக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

இவரது கோரிக்கையை ஏற்று இத்தாலியில் இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மீண்டும் மூன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமது மகள்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள் என்பதைக் காட்டும் படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

மட்டுமின்றி பொதுமக்களிடமும் இந்த விவகாரம் தொடர்பில் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்