சுவிட்சர்லாந்தில் ஒரு முழு கிராம மக்களையும் வீட்டை விட்டு வெளியேற்ற திட்டம்: 10 ஆண்டுகளுக்கு வீடு திரும்ப தடை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து கிராமம் ஒன்றில் வசிக்கும் மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டே வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட உள்ளதோடு, பத்து ஆண்டுகளுக்கு வீடு திரும்பவும் அவர்களுக்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mitholz என்ற கிராமத்திலுள்ள கிராம மக்களைத்தான் வெளியேற்ற பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

உண்மையில், அந்த கிராம மக்களின் நன்மைக்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Mitholz கிராமத்தில், பூமிக்கடியில் ஒரு ஆயுதக்கிடங்கு உள்ளது. அதில் இரண்டாம் உலகப்போர் காலத்தைச் சேர்ந்த 3,500 டன் வெடிபொருட்கள் உள்ளன.

1947ஆம் ஆண்டு, அந்த வெடிபொருட்களில் பாதி வரை வெடித்ததில் ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டார்கள்.

மீண்டும் அவை வெடிக்கலாம் என்ற அச்சத்தின் பேரில், அவற்றை அப்புறப்படுத்த பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.

ஆனால், அதை செய்து முடிக்க 2031ஆம் ஆண்டு வரை கூட ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவேதான் அந்த கிராம மக்களை அரசு வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வழியே செல்லும் ஒரு சாலையும், ரயில் பாதையும் கூட மூடப்படலாம் என தெரிகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்