சுவிஸில் 13 வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணமான நபருக்கு கிடைத்த தண்டனை: முழு தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தொடர் கிண்டலுக்கும் இணைய துஸ்பிரயோகத்திற்கும் இரையானதால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Aargau மண்டலத்தின் Spreitenbach பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி Celine Pfister என்பவர் இணையம் வழியாக துன்புறுத்துதல் மற்றும் கிண்டலுக்கு உள்ளானதால் கடந்த 2018 ஆகஸ்டு மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட Dietikon பகுதியை சேர்ந்த தற்போது 17 வயதாகும் நபர் தொடர்பிலானவிசாரணை முடிவடைந்த நிலையில்,

தண்டனை குறித்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் 4 நாட்கள் அவர் சமூக பணியில் ஈடுபட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என செலினின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் என அனைவரும் எண்ணியிருந்த நிலையில்,

அளிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு பலருக்கும் ஏமாற்றமளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் நடக்கும் போது 15 வயதேயான அந்த சிறுவன், செலினை தமது இச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள முயன்றுள்ளார்.

மட்டுமின்றி தமது 20 அந்தரங்கப் புகைப்படங்களை அந்த சிறுவன் செலினுக்கு அனுப்பி வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சிறுவன் செலினை கட்டாயப்படுத்தி தமது ஆசைக்கு இணங்க வைக்கவும் முயன்றுள்ளார்.

ஆனால் அதற்கு செலின் மறுக்கவே ஆத்திரமடைந்த அந்த சிறுவன் செலினை பழி தீர்த்துள்ளார். அதுவே செலின் தற்கொலைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...