அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை எகிறும்: சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மருத்துவ நிபுணர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 9 பேர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் இதன் எண்ணிக்கை எகிறலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகின் 56 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 84 ஆயிரம் பேர் இலக்காகியுள்ளனர்.

சுமார் 3,000 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், தற்போது ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிரித்து வருகிறது.

பிரித்தானியாவில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் சுமார் 700 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில், அடுத்த சில நாட்கள் சுவிட்சர்லாந்தில் இதன் தாக்கம் எகிற வாய்ப்புள்ளதாகவும், ஆனால் கட்டுப்படுத்துவது கடினம் எனவும் தொற்று நோய்களுக்கான துறை தலைவர் Daniel Koch தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில், நிபுணர்கள் மற்றும் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட மக்களை அனுமதிக்கும் மருத்துவமனைகள் உள்ளிட்டவை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...