சுவிட்சர்லாந்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு தண்டனை அறிமுகம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்தே, சுவிஸ் பெடரல் பொது சுகாதார அலுவலகம் (FOPH), கொரோனா தொற்றைத் தவிர்ப்பது எப்படி, மற்றும் மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்த அறிவுரைகளை வழங்கிய வண்ணம் உள்ளது.

1,000 பேருக்கு மேல் கூடும் பொது நிகழ்ச்சிகளை தடை செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்தவண்ணம் உள்ளனர்.

கொரோனா அபாயத்திலிருப்போரை பாதுகாப்பதற்காக, டிசினோ மாகாணத்தில் விதிக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாடுகள் மீதமுள்ள சுவிஸ் மாகாணங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்றும் FOPH தெரிவித்துள்ளது.

எனவே, விரைவில் மேலும் அதிக கட்டுப்பாடுகள் சுவிட்சர்லாந்தில் விதிக்கப்பட உள்ளன.

டிசினோ மாகாணத்தில், தியேட்டர்கள், பனிச்சறுக்கு ரிசார்ட்கள், உடற்பயிற்சி மையங்கள், இரவு விடுதிகள் மற்றும் சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

அதேபோல், டிசினோ இத்தாலியுடனான ஒன்பது எல்லை கடக்கும் பகுதிகளை மூடியுள்ளது. இந்நிலையில், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட உள்ளன.

உதாரணமாக தனிமையில் அடைக்கப்படுவதை மீறுவது போன்ற நடவடிக்கைகளுக்கு, 5,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்