தீவிரமாகும் கொரோனாவை கட்டுப்படுத்த சுவிற்சர்லாந்து நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம்!

Report Print Vijay Amburore in சுவிற்சர்லாந்து

உலகெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவை விரைவில் கண்டறியும் முறையினை, சுவிற்சர்லாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை விரைந்து கண்டுபிடிப்பதற்காக, சுவிற்சர்லாந்தில் இயங்கி வரும் ரோச் ஹோல்டிங் ஏ.ஜி. (Roche Holding AG) என்கிற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சோதனை முறைக்கு, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த சோதனை முறையில் 3.5 மணிநேரத்திலே முடிவுகள் கிடைக்கின்றன. மேலும், தினசரி 4,128 சோதனை முடிவுகளைத் தரக்கூடும் என்று பாசலை தளமாகக் கொண்ட நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் விரைவில் நோயாளிகளை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதன் மூலம், கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பிப்ரவரியில் மத்திய அரசாங்கத்தால் விநியோகிக்கப்பட்ட குறைபாடுள்ள கருவிகளால் அமெரிக்கா சோதனை செய்தபோது, பல தவறான முடிவுகள் கிடைத்ததாலே தற்போது அங்கு 1,660க்கும் அதிகமானவர்களை நோய் தொற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது வடிவமைக்கப்பட்ட இந்த புதிய சோதனை முறையானது ஏற்கனவே அமெரிக்கா முழுவதும் 100 க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் நிறுவப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் FDA இலிருந்து அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெறும் மூன்றாவது கொரோனா வைரஸ் கண்டறியும் முறை இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்